சென்னை : ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் போரை நிறுத்துவதற்கான அடையாளங்களே தெரியவில்லை என்று தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாகவே இந்திய அரசு மதிக்கவில்லை என்றும் இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.