1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

நடிகர்களுக்கு சரத்குமார் கட்டுப்பாடு!

சரத்குமார் நடிகர் சங்கம் கட்டுப்பாடு அறிக்கை உண்ணாவிரதம்
இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று (நவ.1) நடைபெறும் உண்ணாவிரதத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடிகர்கள் யாரும் பேசக் கூடாது என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டும், நடிகர்களின் உணர்வைப் பதிவு செய்யும் வகையிலும் நடிகர்கள் அனைவரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

நடிகர்களின் உண்ணாவிரதத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போராட்டத்தில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகள், இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேச வேண்டுமே தவிர சட்டத்திற்கு புறம்பாகவோ, யார் மனதையும் புண்படுத்தும் விதமாகவோ பேச வேண்டாம் என்றும் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
About Writer
Webdunia