1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

சென்னை மருத்துவமனையில் எடியூரப்பா அனுமதி!

பிஎஸ் எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதி சென்னை
நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வரும் கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எடியூரப்பாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஒருநாள் முழுவதும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.