சென்னை : தமிழக அரசு, குறைந்தபட்சம் ஒரு டன் கரும்புக்கு 2,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதியை சர்க்கரை ஆலைகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.