காஞ்சிபுரத்தில் இடிதாக்கி 3 பேர் பலி!
காஞ்சிபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இடிதாக்கி உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த பத்து பேர் அங்குள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டு கொண்டிருந்தனர்.
அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு முருகன் (40) அவரது மனைவி பத்மாவதி (35) இவர்களது மகள் நிர்மலா (18) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.