சென்னை: தமிழக அரசின் நிறுவனமான கோ-ஆப் டெக்சில் இந்தியா முழுவதும் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் 2007-2008 ஆம் ஆண்டிற்கு தீபாவளி போனஸ் 8.33 விழுக்காடு மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையாகவும், உச்சவரம்பாக ரூ. 4,200ஐ வழங்க தமிழக முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.