இலங்கைத் தமிழர்களுக்காக ம.தி.மு.க. சார்பில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்துக்கு அ.இ.அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு ரேடார்களும், ஆயுதங்களும் வழங்குவதோடு இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவினரையும் அனுப்பி வைத்து தமிழ் இனத்திற்கு துரோகம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து 10ஆம் தேதி சென்னையில் ம.தி.மு.க. மறியல் அறப்போரை அறிவித்தது.பொது செயலாளர் வைகோ தலைமையில்...