சென்னை : பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் ஆட்சி செய்வதற்கான தார்மீக உரிமையை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு இழந்துவிட்டது என்றும் தேசத்தை வாட்டி வதைக்கும் அத்தனை துன்பங்களுக்கு பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என்றும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.