பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது குறித்து முடிவு எடுக்க அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரத்தை வழங்குவது என்று பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.webdunia photoFILE அ.இ.அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார். அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில்...