சென்னை : ''கடந்த 20 ஆண்டுகளில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்து சொத்துக்கள் சேர்ப்பதில் அக்கறை செலுத்தினார்களே தவிர, மக்கள் நலனுக்காக உருப்படியான திட்டங்களை போடாததுக்கு இப்போதைய மின்சார நெருக்கடியே எடுத்துக்காட்டு'' என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.