சென்னை: தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள மின்வெட்டு உள்பட பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.