சென்னை: பிளஸ் 1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார். மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குப் பரிசுத் தொகைகள் முதல்வர் வழங்கினார்.