தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: தா.பாண்டியன்!
‘‘சிறிலங்கா சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஜூலை தொடக்கத்தில் 350 படகுகளுடன் 1,200 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, மிக மோசமாக சித்ரவதை செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று கடந்த மே 27ல் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் சிறிலங்கா அனுராதபுரத்தில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மீனவர்களை விடுவித்து ஒப்படைப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதில் ஒரு மாணவரும் சிறையில் இருக்கிறார். உடனடியாக அவர்களை விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும்’’ என்று தா.பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.