திருச்சி அருகே காவல்துறையினர் இன்று நடத்திய என்கவுண்டரில் பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டான்.திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்பட ஏராளமான வழக்குகள் பாம் பாலாஜி மீது உள்ளது.இந்தநிலையில் திருவெறும்பூர் காவல்துறை ஆய்வாளர் கபிலன், உதவி ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் சர்கார்பாளையம் என்ற இடத்தில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த பாம் பாலாஜி வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றான். அவனை...