எண்ணற்ற தீமைகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி இரயில் நிலையத்துக்கு வந்து இறங்கிய போது, தண்டவாளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் காணப்பட்டன. இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலுமே பிளாஸ்டிக் பொருட்கள் நிறைந்து கிடக்கும் காட்சியை காணமுடியும். தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கைப்பைகள் பல ஆண்டுகள் அழிந்து போகாமல்...