பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கலாக கொண்டாடுங்கள்: மு.க.ஸ்டாலின்!
எதிர்வரும் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கல் திருநாளாக கொண்டாடுமாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் ஒரு பெரிய சமூக இயக்கமாக உருவாகியுள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், அவர்கள் திறன்களை வெளிக் கொணரவும் சுய உதவிக் குழு கூட்டமைப்புகளிடையே பொங்கல் திருநாளையொட்டி கலைப் போட்டிகள் நடத்தப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.
இதன்படி சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் வட்டார மற்றும் மாவட்ட அளவில் கலைப்போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் இப்போட்டிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினைச் சார்ந்த சகோதரிகள் மிகுந்த ஆர்வத்துடன் பெருவாரியாக கலந்து கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த சகோதரிகள் அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த கலைப் போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்துவதற்கும், வெற்றி பெற்ற குழு உறுப்பினர்களுக்கு எதிர்வரும் ஜனவரி 18ஆம் தேதி அன்று மாவட்ட அளவில் விழா நடத்தி பரிசுகள் வழங்கவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், இவற்றிக்காக ரூ.1 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை சாதி சமயம் வேறுபாடின்றி சகோதரத்துவத்தோடும் சமத்துவத்தோடும் சமத்துவ பொங்கல் திருவிழாவாக கொண்டாட வேண்டுமென்று விரும்பியுள்ளவாறு எதிர்வரும் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கல் திருநாளாக கொண்டாடுமாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாதி, சமய பேதங்களை அகற்றி சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் முன்னணியில் இருப்பது மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்பதை எடுத்துக்காட்ட இந்த சமத்துவ பொங்கல் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.