கட்டாய மருத்துவ சேவை : முதல்வர் தலையிட வேண்டுகோள்!
ஓராண்டு கட்டாய மருத்துவ சேவை பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிராமப் புறங்களில் கட்டாய மருத்துவ சேவை என்ற பெயரில் இளம் மருத்துவர்களுக்கான 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர டாக்டர் பணியிடங்கள் ஒழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ். படிப்பு காலத்தை உயர்த்தாமல், டாக்டர்களுக்கு நிரந்தர நியமனத்தை செய்ய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்காக மருத்துவ மாணவர்கள் போராடி வருகின்றனர். அவர்களை அழைத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இந்த பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு மருத்துவ மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று டாக்டர் ரவீந்திரநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.