1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

நாடு ‌திரு‌ம்‌பினா‌ர் ப‌க்ன‌ர்!

ஸ்டீவ் பக்னர் ஜமை‌க்கா இந்தியா-ஆஸ்திரேலியா சிட்னி டெஸ்ட்
சர்ச்சைக்குரிய நடுவ‌ர் ஸ்டீவ் பக்னர் தனது சொந்த நாடான ஜமை‌க்காவுக்கு சென்றுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான சிட்னி டெஸ்ட்டில், ஸ்டீவ் பக்னர் வழ‌ங்‌கிய தவறான ‌தீ‌ர்‌ப்புக‌ள் பெரு‌ம் ச‌ர்‌‌ச்சையை ஏ‌ற்படு‌த்‌தியது. ப‌ல்வேறு ‌‌விம‌ர்சன‌த்து‌க்கு‌ம் ப‌க்ன‌ர் ஆளானா‌ர். உடனடியாக பக்னரை நீக்க வேண்டும் என இந்திய ‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்ட‌தி‌ன் பே‌ரி‌ல் ஆஸ்‌ட்ரேலிய தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்தநிலையில் பக்னர் ஆஸ்‌ட்ரேலியாவிலிருந்து தனது சொந்த நாடான ஜமை‌க்காவுக்கு சென்றா‌ர். தொடரிலிருந்து நீக்கப்பட்டது வருத்தம் தருவதாக இருந்தாலும், கிரிக்கெட் பேரவை‌யி‌ன் முடிவை மதிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தவறு செய்வது இயற்கையானது, மன்னிப்பே தெய்வீகமானது என்று கூறியுள்ள பக்னர், 35 அப்பீல்களில் 2 தவறான முடிவுகள் பெரிதுபடுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.