1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் பெயசுடன் இணைந்து ‌விளையா‌கிறா‌ர் பூபதி!

ஒலிம்பிக் போட்டி ‌லியா‌ண்ட‌ர் பய‌ஸ் மகேஷ் பூபதி நடச‌த்‌‌திர டென்னிஸ் வீரர்கள்
ஒலிம்பிக் போட்டியில் ‌லியா‌ண்ட‌ரபயசுடன் இணைந்து ஆட மகேஷ் பூபதி முடிவு செய்து‌ள்ளா‌ர்.‌

இந்திய நடச‌த்‌‌திடென்னிஸ் வீரர்கள் மகேஷ்பூபதியும், லியாண்டர் பயசு‌ம் இணை சேர்ந்து ஒரு காலத்தில் இரட்டையர் டென்னிசில் கொடி க‌ட்டி பற‌ந்தா‌ர்க‌ள். மூ‌ன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை இ‌ந்த இணை வெ‌ன்றது. ‌பி‌ன்ன‌ர் கருத்து வேறுபாடு காரணமாக ப‌ிரிந்து விட்டனர். அத‌ன் ‌பிறகு இருவரும் தனித்தனியாக இணை சேர்ந்து விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆகஸ்‌ட் மாதம் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டி‌யி‌ல் பூப‌தியு‌ம், பயசு‌ம் இணைந்து பெய்ஜிங்கில் களம் இறங்க முடிவு செய்து உள்ளார்.

பெய்ஜிங்கில் நாங்கள் இணைந்து ஆட விளையாட ஆர்வமாக உள்ளோம். நாட்டுக்காக பதக்கம் பெற்றுத் தரும் வாய்ப்பில் நாங்களும் இருப்பதாக கருதுகிறார்கள். போட்டிக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. விரைவில் பயிற்சியை தொடங்குவோம்' என்று மகே‌ஷ் பூப‌தி கூ‌றினார்.