1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

இந்த வாய்ப்பை எ‌தி‌ர்பா‌ர்‌த்‌திரு‌ந்தே‌ன்: சேவா‌க்!

ஆஸ்‌ட்ரேலிய இந்திய அணி வீரேந்திர ஷேவாக் எதிர்பார்த்ததாக
ஆஸ்‌ட்ரேலிய சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்த்ததாக வீரேந்திர ஷேவாக் மகிழ்ச்சியோடு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இந்திய ‌கி‌ரி‌க்கெ‌ட் அணி ஆஸ்‌ட்ரேலியா‌வி‌‌ல் சு‌ற்று‌ப் பயண‌ம் செ‌ய்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இ‌ந்‌திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனா‌ல் யாரு‌ம் எதிர்பாராத வகை‌யி‌ல் அணியில் வீரேந்திர ஷேவாக் தேர்வு செய்யப்ப‌‌ட்டு‌ள்ளா‌ர். உத்தேச வீரர்களின் பட்டியலில் கூட இடம் பெறாத ஷேவாக் தேர்வு செய்யப்பட்டது ஆ‌ச்ச‌ரிய‌த்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் ஷேவாக் இந்த வாய்ப்பை எதிர்பார்த்திருந்ததாக மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

இ‌ந்‌திய அ‌ணி‌யி‌ல் தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது கு‌றி‌த்து சேவா‌க் கூறுகை‌யி‌ல், உண்மையை சொல்வதானால் தேர்வுக் குழுவினர் என்னை தேர்வு செய்வார்கள் என்றே எதிர்பார்த்திருந்தேன். உத்தேச அணியில் இடம் பெறாவிட்டாலும் ஆஸ்‌ட்ரேலிய பயணத்தில் இடம் பெறுவேன் என்று என்னுடைய உள்ளுணர்வு கூறியது.

தேர்வுக்குழுவினர், அ‌ணி‌த் தலைவ‌ர் கும்ப்ளே ஆகியோருக்கு எனது நன்றியை தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறே‌ன். என்னுடைய ஆ‌ட்ட‌த்‌தி‌ல் கவனம் செலுத்தி நீண்ட நேரம் ஆட முயற்சிப்பேன். ஆஸ்‌ட்ரேலிய சுற்றுப்பயணம் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் எ‌ன்று சேவா‌க் கூ‌றியு‌ள்ளா‌ர்.