1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

‌க‌ண்டி ‌கி‌ரி‌க்கெ‌ட் மைதான‌த்து‌க்கு முர‌ளிதர‌ன் பெய‌ர்!

டெஸ்ட் கிரிக்கெட் அதிக விக்கெட் முத்தையா முரளிதர‌ன் கவுரவ‌ம் கா‌மி‌னி கோகுகே
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ள முத்தையா முரளிதரனை கவுரவிக்கும் வகையில் கண்டி மைதானத்திற்கு அவரது பெயரை சூட்டவிருப்பதாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் கா‌மி‌னி கோகுகே கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

கொழு‌‌ம்பு கண்டியில் உள்ள அஸ்கிரியா மைதானத்தின் பெயரை முரளிதரன் மைதானம் என்று மாற்றுமாறு நிர்வாகிகளை தாம் கேட்டுக் கொள்ளப் போவதாக அமை‌ச்ச‌ர் காமினி லோகுகே தெரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இந்த மைதானத்தில்தான் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முத்தையா முரளிதரன் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷே‌ன் வா‌ன் சாதனையை சமன் செய்தார்.

இதே மைதானத்தில்தான் வங்கதேசத்துக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் தனது 700வது விக்கெட்டை அவர் வீழ்த்தினார்.

இந்த மைதானம் அமைந்துள்ள கண்டிதான் முரளிதரனின் சொந்த ஊர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அ‌ஸ்‌கி‌ரியா மைதான‌த்‌‌தி‌ல் 1983ஆ‌ம் ஆண‌்டு டெ‌ஸ்‌ட் போட‌்டி‌யி‌ல் நட‌ந்து வரு‌கிறது. இ‌ந்த மைதான‌ம் உலக அ‌ள‌வி‌ல் க‌ண்ணை கவரு‌ம் வகை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.