1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

3வது டெ‌ஸ்‌ட்டி‌ல் மா‌லி‌க் ‌விளையாட மா‌ட்டா‌ர்!

காய‌ம் பெ‌ங்களூ‌ரி‌ல் நாளை டெ‌ஸ்‌ட் பா‌கி‌ஸ்தா‌ன் சோ‌யி‌ப் மா‌லி‌க்
கா‌லி‌ல் ஏ‌ற்ப‌ட்ட காய‌ம் இ‌ன்னு‌ம் குணமடையாததா‌‌ல் பெ‌ங்களூ‌ரி‌ல் நாளை துவ‌ங்கு‌ம் டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி‌த் தலைவ‌ர் சோ‌யி‌ப் மா‌லி‌க் ‌விளையாட மா‌ட்டா‌ர் எ‌ன்று தெ‌ரி‌கிறது.

புதுடெல்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்தவுடன் பயிற்சியில் ஈடுபட்ட மாலிக், கா‌ல்ப‌ந்து விளையாடும் போது அவரது காலில் காயம் ஏற்பட்டது. காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் இன்னும் 5 நா‌ட்க‌ள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால் பெங்களூரில் நாளை தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி‌த் தலைவராக யூனூஸ்கான் செயல்படுவார் என்று தெரிகிறது.

ஷோயப் மாலிக்கை நேற்று பரிசோதித்த பெங்களூர் மருத்துவர், அவர் மேலும் 5 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியதாக பாகிஸ்தான் அணியின் மேலாளர் இஷான் மாலிக் தெரிவித்தார். அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.