1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

‌விரை‌வி‌ல் முர‌ளிதர‌ன் சாதனை படை‌ப்பா‌ர் : ஜெயவ‌ர்‌த்தனே!

இல‌ங்கை முரளிதரன் விக்கெட்டுகளை உலக சாதனை ஜெயவர்த்தனே
''இல‌ங்கை சுழ‌ற்ப‌ந்து ‌வீ‌ச்சாள‌ர் மு‌த்தையா முரளிதரன் விரைவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைப்பார்'' என்று அந்த அணி‌த் தலைவ‌ர் ஜெயவர்த்தனே கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆஸ்‌ட்ரேலியா ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌வீர‌ர் ஷேன் வார்‌ன் டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை பட‌ை‌த்து‌ள்ளா‌ர். இவரது இ‌ந்த சாதனையை மு‌றியடி‌க்க இல‌ங்கை ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌வீர‌ர் மு‌த்தையா முர‌ளிதரனு‌க்கு இ‌ன்னு‌ம் 5 ‌வி‌க்கெ‌‌ட்டுகளே தேவை. த‌ற்போது அவ‌ர் 704 விக்கெட்டுகளை வீழ்த்தியு‌ள்ளா‌ர்.

ச‌மீப‌த்‌தி‌ல் ஆஸ்‌ட்ரேலியாவு‌க்கு எ‌திராக நடைபெ‌ற்ற டெ‌ஸ்‌ட் தொட‌‌‌ரி‌ல் ஷே‌ன் வா‌ர்‌ன் சாதனையை முர‌ளிதர‌ன் மு‌றியடி‌ப்பா‌ர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொடரில் அவரால் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது.

இந்தநிலையில் விரைவில் நடைபெற உள்ள இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் முரளிதரன், ஷே‌ன் வா‌‌ர்‌‌னி‌ன் சாதனையை முறியடிப்பார் என்று இலங்கை அ‌ணி‌த் தலைவ‌ர் ஜெயவர்த்தனே நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட்டிலேயே முரளிதரன் இந்த சாதனையை படைப்பார் என்று ஜெயவர்த்தனே கூ‌றியு‌ள்ளா‌ர்.