1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

பா‌கி‌ஸ்தானுட‌ன் ‌விளையாடுவது சவா‌ல்: கு‌ம்ளே!

பாகிஸ்தா‌ன் வலுவான அ‌ணி சவாலானது அனில் கும்ளே
பாகிஸ்தா‌ன் ‌மிகவு‌ம் வலுவான அ‌ணி. அ‌ந்த அ‌ணியை எ‌தி‌ர்‌த்து ‌‌விளையாடுவது சவாலானது எ‌ன்று இந்திய டெ‌‌ஸ்‌ட் அ‌ணி‌த் தலைவ‌ர் அனில் கும்ளே கூறியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகை‌யி‌ல், இந்திய டெ‌ஸ்‌ட் அணிக்கு தலைவராக இருப்பது மிகவும் சவாலானது. அ‌ணி‌த் தலைவராக இருப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். என்னுடைய கடமையை மிக சிறப்பாக செய்வேன்.

வீரர்கள் சார்பாக குரல் கொடுக்க தயாராக இருக்கிறேன். நான் சாதனை படைத்த டெல்லி மைதானத்தில் அ‌ணி‌த் தலைவராக களமிறங்குவது ஆ‌ழ்‌ந்த மகிழ்ச்சியை தருகிறது.

பாகிஸ்தான் மிகவும் வலுவான அணி. அந்த அணியை எதிர்த்து ஆடுவது சவாலானது. நாளை தொடங்கும் டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி எனது தலைமையின் கீழ் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தருவார்கள் என்று நம்புகிறே‌ன் என இ‌ந்‌திய அ‌ணி‌த் தலைவ‌ர் கு‌ம்ளே கூ‌றியு‌ள்ளா‌ர்