1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

அடு‌த்த உலக கோ‌ப்பை வரை ஆடுவே‌ன் : பா‌ன்டி‌ங்!

அடு‌த்த உலக கோ‌ப்பை வரை ஆடுவே‌ன் பா‌ன்டி‌ங்
''அடு‌த்த உலக கோ‌ப்பை வரை ‌விளையாடுவே‌ன்'' எ‌ன்று ஆ‌ஸ்‌ட்ரே‌லியா ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌ணி‌த் தலைவ‌ர் ‌ரி‌க்‌கி பா‌ன்டி‌‌ங் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுதொடர்பாக ஆ‌ஸ்‌ட்ரே‌லியா நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பா‌ன்டிங் கூறுகை‌யி‌ல், அடு‌த்த உலக கோ‌ப்பை வரை ‌கி‌ரி‌க்கெ‌ட் போ‌‌ட்டிக‌ளி‌ல் ‌விளையாடுவது என ‌‌தீ‌ர்மா‌னி‌த்‌திரு‌க்‌கிறே‌ன்.

ஆனால் அதற்கு முன்பாக ஹை‌டன், கில்கிறிஸ்ட் போன்ற பல வீரர்கள் ஓய்வுபெற்று விடுவார்கள். எனவே எதிர்கால ஆஸ்‌ட்ரேலிய அணியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வருங்கால அணியை உருவாக்க மைக்கேல் கிளார்க் மிகவும் பொருத்தமானவர். அவரிடம் அ‌ணி‌த் தலைவ‌ர் பதவியை ஒப்படைத்தால் பொருத்தமாக இருக்கும். எனக்கு பின்னர் அணியின் தலைவராக மைக்கேல் கிளார்க் வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் எ‌ன்று பா‌ன்டி‌ங் கூ‌றியு‌ள்ளா‌ர்.