1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

இ‌ந்‌திய ‌‌லீ‌க்‌கி‌ல் பா‌ன்டி‌ங்!

இ‌ந்‌திய ‌‌லீ‌க்‌கி‌ல் பா‌ன்டி‌ங்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் லீக் போட்டிகளில் விளையாட ஆஸ்‌ட்ரேலிய அ‌ணி‌த் தலைவ‌ர் பாண்டிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜி டிவி நிறுவனம் துவக்கியுள்ள இந்திய கிரிக்கெட் லீக் அமைப்பிற்கு போட்டியாக இந்திய கிரிக்கெட் வாரியம், இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பை தொடங்கியுள்ளது.

இந்த அமைப்பு சார்பின் விளையாட பல முன்னணி சர்வதேச வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆஸ்‌ட்ரேலிய அ‌ணி‌த் தலைவ‌ர் பாண்டிங் உள்ளிட்ட முன்னணி ஆஸ்‌ட்ரேலிய வீரர்கள் இந்த லீக்கிற்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்‌ட்ரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 2 மில்லியன் டாலர் தொகை ஆஸ்‌ட்ரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியத்தால் வழங்கப்பட உள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

வர்த்தக ரீதியாக இந்தியா மிகப்பெரிய சக்தியாக இருப்பதால் இந்திய லீக்கில் ஆட ஒப்புக்கொண்டிருப்பதாக ஆஸ்‌ட்ரேலிய அ‌ணி‌த் தலைவ‌ர் ‌ரி‌க்‌கி பா‌ன்டிங் கூறியிருக்கிறார்.