1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து புறப்பட்டது

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து
ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்றிரவு மும்பை விமான நிலையத்தில் இருந்து அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் அயர்லாந்தில் நடைபெற உள்ளன. இதற்காக, ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு புறப்பட்டுச் சென்றது.

முன்னதாக, இந்திய, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் ஒரு நாள் போட்டிகள் ஸ்காட்லாந்தில் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து இந்திய அணி, இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. அங்கு, இங்கிலாந்து அணியுடன் ஏழு ஒரு நாள் போட்டிகளிலும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது.
About Writer
Webdunia