1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

துணைத் தலைவர் பதவி ஊக்கமளிக்கிறது: மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி ஊக்கமளிக்கிறது
அயர்லாந்து, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு துணைத் தலைவராக தன்னை நியமித்திருப்பது ஊக்கமளிகிறது என்றும், அதே நேரத்தில் அதன் மூலம் தமக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி பெங்களூரில் நான்கு நாள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டது. இதனிடையே பெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகேந்திர சிங் தோனி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

ஒருவருக்கான பொறுப்பு அதிகரிக்கும் போது அவர் அதிக அளவில் பொறுப்புள்ளவராக மாறுவார் என்று குறிப்பிட்ட தோனி, தமக்கு கிடைத்திருக்கும் துணைத் தலைவர் பதவி தன்னை மேலும் ஊக்கப்படுத்தும் என்றார்.
About Writer
Webdunia