Fdi: no Confidence Motion Defeated | அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசுக்கு வெற்றி!
FILE
471 பேர் கொண்ட வாக்கெடுப்பில் 253 பேர் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சுஷ்மா சுவராஜ் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 218 பேர் வாக்களித்தனர்.
அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டத் திருத்த வாக்கெடுப்பில் 254 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 224 பேர் எதிராக வாக்களித்தனர்.
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வாக்களிக்காமல் எஸ்கேப் ஆயின. இது அரசுக்கு ஆதரவானச் செய்கை என்று கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
முன்னதாக சுஷ்மா சுவராஜ் கூறுகையில் சமாஜ்வாடித் தலைவர் முலாயம் சிங் வாக்களித்திருந்தால் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பதே இருந்திருக்காது என்றார்.
அரசை வெற்றிபெறச்செய்யவே முலாயம் சிங் வெளிநடப்பு செய்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது. அவர் சிபிஐ-க்கு அஞ்சி அரசை ஆதரித்ததாக சுஷ்மா சுவராஜ் நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.
"அவரவர்கள் கூறியதை செய்திருந்தாலே போதும், முலாயம் எவ்வளவு உரத்த குரலில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்தார் அவர் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் ஆகியிருக்கும். இது பாஜக பற்றிய விவகாரம் அல்ல, மதப்பிரச்சனையும் அல்ல, ஆனால் பிரச்சனை எஃப்டிஐ-க்கு ஆதரவா அல்லது சிபிஐ நடவடிக்கையை எதிர்கொள்கிறீர்களா? என்பது போலவே முலாயம் வெளிநடப்பு அமைந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியும் சிபிஐ வழக்கை தாஜ் காரிடார் வழக்கில் எதிர்கொண்டுவருகிறது. அவர்களுக்கு ஆதரவு வேண்டுமானால் எங்களிடம் வருவார்கள், அப்போது நாங்கள் மதவாதக் கட்சியல்ல. இதுபோன்ற முரண்பாட்டை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று சுஷ்மா காட்டமாக கூறியுள்ளார்.
