டெங்குவால் இந்தி பட தயாரிப்பாளர் யஷ் சோப்ரா காலமானார்
பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் யஷ் சோப்ரா மும்பையில் காலமானார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஒரு வார காலமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்தார். திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், ஏராளமான ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தி திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பன்முகம் காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் யஷ் சோப்ரா.