1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

இருப்புக்கு மேல் முறைகேடாக சோனியா மருமகனுக்கு ஓவர் டிராஃப்ட் வழங்கிய பொதுத் துறை வங்கி!

சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா
FILE
சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா குறுகிய காலத்தில் 500 கோடிகளுக்கும் மேலாக சொத்துக்களை குவித்தது எப்படி என்று அர்விந்த் கெஜ்ரிவால் கடுமையான கேள்விகளை எழுப்பியதால் திக்குமுக்காடிப் போயுள்ளது காங்கிரஸ் தலைமை. இந்த நிலையில் தனது கணக்கில் வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே வைத்திருந்த வத்ராவுக்கு பொதுத் துறை நிறுவனமான கார்ப்பரேஷன் வங்கி ரூ.7.94 கோடி ரூபாய் அதிகப்பற்று(O/D) வழங்கியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

மங்களுர்ரில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி 2007- 2008 ஆம் ஆண்டுகளில் ராபர்ட் வத்ராவின் ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிடி நிறுவனத்திற்கு ரூ.7.94 கோடி ஓவர் டிராஃப்ட் வழங்கியுள்ளது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.

வங்கிகளின் ஓவர் டிராஃப்ட் அளிக்கும் விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து பிரபல ஆங்கில பத்திரிக்கை கார்ப்பரேஷன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது வாடிக்கையாளர் ரக்சையம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற போர்வையில் தக்வல் தர மறுத்துள்ளார்.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையில் வந்த தகவல்களின் படி ஹரியானாவில் உள்ள மனேசரில் வத்ரா நிறுவனம் இடம் வாங்கியதற்கான முதல் தவணை ரூ.15.38 கோடி செலுத்தப்பட்டதில் இந்த வங்கி ஓவர் டிராஃப்ட் தொகையும் உள்ளடங்கியுள்ளது தெரியவந்தது. இந்த ரூ.7.94 கோரி ஓவர் டிராஃப்ட் தொகையை வத்ரா ஓராண்டில் வங்கிக்கு திருப்பிக் கொடுத்து விட்டார். ஆனால் டி.எல்.எஃபிற்கு அதே நிலத்தை ரூ.58 கோடிக்கு விற்றுள்ளார் ராபர்ட் வத்ரா.

இவ்வளவு பெரிய தொகையை ஓவர் டிராஃப்டாக பெறும் அளவுக்கு ராபர்ட் வத்ராவின் ச்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் பலமானதா என்பது ஐயத்திற்கு உரியதே என்று பத்திரிக்கை செய்திகள் ஐயம் எழுப்பியுள்ளன.

இந்த ஓவர் டிராஃப்டை வழங்கிய போது கார்ப்பரேஷன் வங்கியின் அப்போதைய உயரதிகாரியாக இருந்தவர் சாம்பமூர்த்தி என்பவராவார் ஆனால் அவரும் தன்னால் சரியாக நினைவில் கொண்டு வர முடியவில்லை என்று ஆங்கில பத்திரிக்கை நிருபரிடம் மறுத்துள்ளார்.

ஏற்கனவே சி.எம்.டி.யாக இருந்த பிரதீப்பின் அதிகாரத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய விஜிலன்ஸ் கமிஷன் மெமோ கொடுத்தது.

மேலும் கார்ப்பரேஷன் வங்கியின் மூத்த அதிகாரிகள் முறைகேடாக கடன்கள் வழங்கப்படுவதற்கு எதிராக கையெழுத்து வேட்டையே நடத்தியுள்ளனர். ஆனால் இவரது காலத்தில் ராபர்ட் வத்ரா இவ்வளவு பெரிய ஓவர் டிராஃப்டை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.