1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்

பாஜக வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனை உடல் நிலை ஓய்வு
புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாயின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் மற்றும் மார்புப் பகுதியில் தொற்று காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு காய்ச்சல் இல்லை என்றும், மார்பக்ப் பகுதியில் தொற்று குறைந்துள்ளதாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் எய்ம்ஸ் கண்காணிப்பாளர் டாக்டர் டி.கே. சர்மா தெரிவித்தார்.

தற்போது வாஜ்பாயின் உடல் நிலை சீராக உள்ள போதிலும், அடுத்த சில தினங்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.