1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பிப்ரவரியில் காங். தலைவர்கள் கூட்டம்

காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருப்பதால், அதுபற்றி ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் கூட்டம் அடுத்த மாதம் 15ஆம் தேதிவாக்கில் நடைபெறவுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய ஜனார்த்தன் திவேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன் புதுடெல்லியில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடப்படும் என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் சுமார் 7 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று மற்றொரு பொதுச் செயலாளரான பி.கே. ஹரிபிரசாத் தெரிவித்தார்.

அவர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இறுதி செய்யப்படும் என்றார் அவர்.

கடந்த 2003ஆம் ஆண்டில் இதுபோன்ற மாவட்ட மற்றும் நகர தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.