1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மரா‌ட்டிய பு‌திய முத‌ல்வராக அசோ‌க் சவா‌ன் ‌நியமன‌ம்!

அசோக் சவான் ஏகே அந்தோணி பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
மரா‌ட்டிய மா‌நில‌த்‌தி‌‌ன் பு‌திய முத‌ல்வராக அசோ‌‌க் சவா‌ன் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

மு‌ம்பை‌யி‌ல் நே‌ற்று கா‌ங்‌கிர‌ஸ் எ‌ம்.எ‌ல்.ஏ‌. ‌க்க‌ள் ஒ‌வ்வொருவரையு‌ம் த‌னி‌த்த‌னியாக‌ச் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சிய மூ‌த்த தலைவ‌ர்க‌ள் ஏ.கே. அ‌ந்தோ‌ணி, ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி ஆ‌கியோ‌ர் தெ‌ரி‌வி‌த்த கரு‌த்து‌க்க‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல், கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி இ‌ம்முடிவை எடு‌த்து‌ள்ளா‌ர்.

மறை‌ந்த மு‌ன்னா‌ள் ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் எ‌ஸ்.‌பி. சவா‌னி‌ன் மகனான அசோ‌க் சவா‌ன் (வயது 50), த‌ற்போது மரா‌ட்டிய மா‌நில‌த் தொ‌ழி‌ல்துறை அமை‌ச்சராகவு‌ம், ச‌ட்ட ம‌ன்ற‌க் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவராகவு‌ம் உ‌ள்ளா‌ர்.

மு‌ன்னதாக, மு‌ம்பை‌‌யி‌ல் பய‌ங்கரவா‌திக‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌ல்களு‌க்கு‌ப் பொறு‌ப்பே‌ற்று ‌விலா‌ஸ்ரா‌வ் தே‌ஷ்மு‌க் தனது முத‌ல்வ‌ர் பத‌வியை ‌வி‌ட்டு ‌வில‌கினா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இதையடு‌த்து பு‌திய முத‌ல்வ‌ர் பத‌வி‌க்கு ம‌த்‌திய அமை‌ச்ச‌ர்க‌ள் சு‌ஷி‌ல் குமா‌ர் ‌ஷி‌ண்டே, ‌பி‌ரு‌த்‌விரா‌ஜ் சவா‌ன் ஆ‌கியோ‌ர் உ‌ள்‌ளி‌ட்ட பல‌ரி‌ன் பெய‌ர்க‌ள் அடி‌ப‌ட்டன.

துணை முத‌ல்வ‌ர் சாக‌ன் பு‌ஜ்பா‌ல்!

இதேபோல‌ மரா‌ட்டிய மா‌நில‌த் துணை முத‌ல்வ‌ர் பத‌வி‌க்கு தே‌சியவாத கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சியை‌ச் சே‌ர்‌ந்த சாக‌ன் பு‌ஜ்பா‌ல் ‌நிய‌மி‌க்க‌ப்படுவா‌ர் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌‌யி‌ன் தலைவ‌ர் சர‌த் பவா‌ர் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மு‌ன்னதாக மு‌ம்பை பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌லி‌‌ற்கு‌ப் பொறு‌ப்பே‌ற்று மரா‌ட்டிய‌த் துணை முத‌ல்வ‌ர் ஆ‌ர்.ஆ‌ர். பா‌ட்டீ‌ல் பத‌வி ‌வில‌கினா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.