காவல் நிலையம் மீது தாக்குதல்: 2 நக்சலைட்டுகள் பலி
சத்தீஷ்கரில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகளின் மீது காவலர்கள் நடத்திய தாக்குதலில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பமல்வையா காவல் நிலையத்தின் மீது ஆயுதமேந்திய நக்சலைட்டுகள் நேற்றிரவு தாக்குதல் நடத்தினர். இதை முறியடிக்கும் வகையில் காவலர்கள் நடத்திய எதிர்த் தாக்குதலில் 2 நக்சலைட்டுகள் பலியாயினர்.
அதிகாலையில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் சடலங்கள் மீட்கப்பட்டன என்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அமித் கார்க் தெரிவித்தார்.