1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மும்பையில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி!

மும்பை கிராஃபோர்டு சந்தை
மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிராஃபோர்டு சந்தைப் பகுதியில் உள்ள “சையத” என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் குறைந்த 6 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.

இதில் தற்போது வரை 3 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடி வரும் மேலும் 3 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
About Writer
Webdunia