நாடாளுமன்றத்தில் அனைத்துப் பிரச்சனைகளையும் விவாதிக்க தயார்: பிரதமர்!
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் உட்பட அனைத்துப் பிரச்சனைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தனது அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சந்தித்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பிறகு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இன்றைய கூட்டத்தொடரின் போது அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றகூட்டத்தொடருக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "அவசியமான அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.
நாடாளுமன்றம் நாட்டின் உயரிய அமைப்பு, அங்கு அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் எதிர்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க அரசு தயாராக உள்ளது என்று மன்மோகன் சிங் கூறினார்.
|