1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சுற்றுலா பயணிகள் வருகை 10 ‌விழு‌க்காடு உயர்வு!

சுற்றுலா பயணிகள் இந்தியா 
சுற்றுலாத் துறை
இந்தியாவுக்கு வந்த அய‌ல்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 10.4 ‌விழு‌க்காடஅதிகரித்துள்ளது.

2008 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 38.7 லட்சம் பயணிகள் இந்தியா வந்துள்ளனர். கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 35.08 லட்சம் ஆகு‌ம்.

சுற்றுலாத் துறை மூலம் இந்த ஆண்டில் கடந்த 9 மாதங்களில் அரசுக்கு ரூ.36,464 கோடி அன்னியச் செலாவணி கிடைத்துள்ளது. ரூபாய் மதிப்பில் இது கடந்த ஆண்டைவிட 17.8 ‌விழு‌க்காடஅதிகம். அமெரிக்க டாலர் மதிப்பில் 20.3 ‌விழு‌க்காடஅதிகமாகு‌ம்.
About Writer
Webdunia