1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

வணிக வளாக தீ விபத்து பலி 12 ஆனது!

வணிக வளாக தீ விபத்து பலி 12 ஆனது!
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் வணிக வளாக தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

சோடேபூரில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் 2ம் மாடியில் நடந்த வெல்டிங் வேலையால் தீப்படித்து கட்டிடம் முழுதும் பரவியது.

இதில் பலியானோர் எண்ணிக்கை முதலில் 7 என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று மேலும் 5 உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் ப‌லியானோ‌ர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

காயமடைந்த 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Webdunia