1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஸ்ரீநக‌ரி‌ல் இ‌ன்று ‌நிலநடு‌க்க‌ம்!

ஸ்ரீநக‌‌ர் சோ‌ன்மா‌ர்‌க் நிலநடு‌க்க‌‌‌ம்
ஸ்ரீநக‌ரி‌லு‌ம் அத‌ன் சு‌ற்றுப்புற பகு‌திக‌ளிலு‌ம் இ‌ன்று காலை ‌ஏ‌ற்ப‌ட்ட மிதமான ‌நிலநடு‌க்க‌‌த்தையடு‌த்து பொது ம‌க்க‌ள் அல‌றி அடி‌த்து‌க்கொ‌ண்டு ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு ஓடின‌ர்.

இ‌ன்று காலை 8.06 ம‌ணியள‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்ட இ‌ந்த ‌‌நிலநடு‌க்க‌ம் ‌‌‌ரி‌க்ட‌ர் அளவு கோ‌லி‌ல் 2.9 ஆக ப‌திவா‌கியு‌ள்ளதாக கூற‌ப்படு‌கிறது.

ஸ்ரீநக‌‌ரி‌லிரு‌ந்து 30 ‌கிலோ‌ மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் மைய‌ம் கொ‌ண்டு ஏ‌ற்ப‌ட்ட இ‌ந்த ‌நிலநடு‌க்க‌‌‌ம், ஸ்ரீநக‌ர் - லே தே‌சிய நெடு‌ஞ்சாலை‌‌யி‌ல் உ‌ள்ள சோ‌ன்மா‌ர்‌க் பகு‌‌தியை தா‌க்‌கியதாக கூற‌ப்படு‌கிறது.

மேலு‌ம், இ‌ந்‌த ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ல் உ‌‌யி‌ரிழ‌ப்போ, பொரு‌ள் சேதமோ கு‌றி‌த்து உடனடியாக எ‌‌ந்த‌வித தகவலு‌ம் இ‌ல்லை எ‌ன்று‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.