1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சஞ்சய் தத் விடுதலை தாமதம்!

சஞ்சய் தத் விடுதலை எரவாடா சிறை
எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் பிணையில் விடுதலை செய்யப்படுவது தாமதமாகியுள்ளது!

பிணையில் விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவு இன்று மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பிணைய விடுதலைக்கான உத்தரவு பெறுவதில் காலதாமதமாமகிவிட்டதனால், இன்று மாலை 5.30 மணிக்குள் அதனை எரவாடா சிறைக்கு கொண்டு சென்று தாக்கல் செய்ய இயலாமல் போனது. இதனால் சஞ்சய் தத்தும், அவருடன் சேர்த்து பிணைய விடுதலை அளிக்கப்பட்ட மேலும் 5 பேரும் நாளை விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Webdunia