மத்திய அரசின் எண்ணை நிறுவனங்களில் பணியாற்றிம் அதிகாரிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்கின்றனர்.இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விநியோகம் உள்ளிட்டவை பாதிக்கப்படும்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணை சம்மந்தப்பட்ட 15 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கச்சா எண்ணை உற்பத்தி நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியற்றில் சுமார் 45 ஆயிரம் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள், சம்பள உயர்வு...