1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாதச் செயல்களில் தொடர்புடைய சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமை கைது செய்துள்ளதாக வந்துள்ள தகவல்கள் குறித்து உண்மையை தெரியபடுத்துமாறு பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பிற்கு மத்திய புலனாய்வுக் கழகம் கடிதம் அனுப்பியுள்ளது!பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தாவூத் இப்ராஹிம் கைது செய்யப்பட்டதாகவும், அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப்.ஐ.ஏ.யின் விசாரணையில் உள்ளதாகவும் செய்திகள்...