1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சஞ்சய் தத் மனு: ஆகஸ்ட் 10 தேதி விசாரணை

சஞ்சய் தத் மனு ஆகஸ்ட் 10 தேதி விசாரணை
தண்டனையை ரத்து செய்யக் கோரியும், பிணைய விடுதலை கோரியும் இந்தி நடிகர் சஞ்சய் தத் தாக்கல் செய்த மனுக்கள் வருகிற வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வருகிறது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சஞ்சய் தத் புனே அருகே உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். தடா நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவரது வழக்கறிஞர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

மேலும், சஞ்சய் தத்திற்கு பிணைய விடுதலை அளிக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் வருகிற வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வருகிறது.