1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அச்சத்தை உண்டாக்கவே அல் கய்டா குறுந்தகடு : மத்திய அரசு!

சர்வதேச பயங்கரவாதம் அல் கய்டா குறுந்தகடு
இந்தியாவின் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்து சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல் கய்டா வெளியிட்டுள்ள குறுந்தகடு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவே என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது!

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் சிறீநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறைச் செயலர் மதுக்கர் குப்தா, ஜூன் 8 ஆம் தேதி சிறீநகரில் வெளியிடப்பட்ட அந்த குறுந்தகடு குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது என்றும், அதன் பின்னணி தெரிந்த பிறகு உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று கூறினார்.

இந்த குறுந்தகடு வெளியீட்டைக் கண்டு யாரும் அச்சமுறத் தேவையில்லை என்று குப்தா கூறினார். (யு.என்.ஐ.)
About Writer
Webdunia