மட்டக்களப்புச் சிறையில் குண்டுவெடிப்பு: ஏழு கைதிகள் காயம்!
இலங்கையில் மட்டக்களப்புச் சிறையில் நடந்த குண்டுவெடிப்பில் 7 கைதிகள் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்புச் சிறையில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் கொலைக் குற்றவாளிகள் 4 பேர் உள்பட 7 கைதிகள் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலையில் உள்ள 10ஆம் எண் அறையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாகவும், அது கையெறி குண்டாக இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் காவலர்கள் கூறியதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
அதே அறையில் கிடந்த மற்றொரு கையெறி குண்டைக் காவல்துறையினர் கண்டறிந்து செயலிழக்கச் செய்துள்ளனர்.