இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடன காலத்தில் அப்போதைய அதிபர் முஷாரஃப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் அனைவரும் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவர் எனத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி) இணைத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி, அதற்கான காலக்கெடுவை குறிப்பிடவில்லை.