ரயில்வே பட்ஜெட்டால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று தொழில் மற்றும் வர்த்தக சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன. மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் நேற்று மக்களவையில் அடுத்த நிதி ஆண்டிற்கான (2008-09) ரயில்வே நிதி நிலை அறிக்கையை சமர்பித்தார். இந்த பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இது வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். ரயில்வே பட்ஜெட் பணவீக்கத்தை அதிகரிக்கும் வகையில் இல்லை. அதே நேரத்தில் வளர்ச்சியை நோக்கி உள்ளது...