1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

எல்ஜி விற்பனை உயர்வு

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் ஜெய்ராம் வரதராஜ்
கோவையைச் சேர்ந்த எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை 15 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந் நிறவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெய்ராம் வரதராஜ், இதன் விற்பனை, இந்த நிதி ஆண்டில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 15% உயர்ந்துள்ளது. இதன் விற்பனை வருவாய் ரூ.13.77 கோடியாக உயர்ந்ததாக தெரிவித்தார்.

இது முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ரூ. 11.98 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் லாபம் ரூ. 1.05 கோடி. (முந்தைய ஆண்டு ரூ. 95 லட்சம்). இந்த நிதி ஆண்டின் 9 மாதங்களில் நிறுவனத்தின் விற்பனை ரூ. 41.47 கோடி. (முந்தைய ஆண்டு ரூ. 35.70 கோடி) கம்ப்ரெஸர் வர்த்தகம் 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
About Writer
Webdunia