கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் காலாண்டு நஷ்டம்
தனியார் விமான போக்குவரத்து சேவை நிறுவனமான கிங் ஃபிஷர் ஏர் லைன்ஸ் நிறுவனம் 3ஆம் காலாண்டில் ரூ.626 கோடி நஷ்டமடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நஷ்டம் ரூ.423 கோடியாக இருந்தது.
சர்வதேச சேவைகளின் துவக்க செலவுகளும், டாலர்களில் செலவிடப்பட்ட தொகையின் பரிமாற்ற மதிப்பு மாற்றங்களினால் ஏற்பட்ட செலவுகளும் இந்த நஷ்டத்தை அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் வட்டி செலவுகள் ரூ.103 கோடி அதிகரித்தது இதுவும் மொத்த நஷ்டத்தில் பங்கு வகித்துள்ளது.
நிறுவனத்தின் நிகர வருவாய் இதே காலக்கட்டத்தில் ரூ.1,447 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் ரூ.1,353 கோடியாக இருந்துள்ளது.